லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா

15

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அதன் குடிமக்களை லெபனானை (Lebanon) விட்டு உடனடியாக வெளியேறுமாறு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க (US) தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் லெபனானின் நிலைமை விரைவாக மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு (Israel) எதிராக கடுமையான பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்துள்ளது.

மேலும், பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் கொன்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது படுகொலை நடந்தது.

லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா, ஈரான் ஆதரவுக் குழு, அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்பதுடன் இது ஒரு தீவிரமான இஸ்ரேலிய பதிலைத் தூண்டும்.

இந்நிலையிலேயே, லெபனான் குடியேற்றவாசிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு வெளியேற விரும்பாதவர்களை ஒரு நிரந்தர, பாதுகாப்பான இடத்தை அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.