இந்திய பாரம்பரியத்தின் மீதான உங்கள் அன்பு மிகவும் பாராட்டுக்குரியது என கமலா ஹாரிஸ் (Kamala Harris) குறித்து டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ள கருத்து தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.
கமலா ஹாரிஸின் இந்திய பாரம்பரிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் போட்டியிடுகின்ற நிலையில் இரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், அண்மையில் தாம் கலந்துக்கொண்ட கறுப்பின பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கமலா ஹாரிஸின் இனம், நிறம் என்பவற்றை குறிப்பிட்டு இனவெறி கருத்தை தெரிவித்தமை மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை கருத்துகளுக்கு இடையே, தற்பொழுது டொனால்ட் ட்ரம்ப்பின் குறித்த பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமலா ஹாரிசின் தாய் இந்தியாவை (India) சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை (Jamaica) சேர்ந்தவர். அந்தவகையில், அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆவார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.