கனடா (Canada) – ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒரு இந்திய தம்பதியினருக்கு கனேடிய நிரந்தர குடியுரிமை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியர்களான (India) ரமன்தீப் சிங் என்பவரும் (28) அவரது மனைவியான சிம்ரன் சத்வாலும் (28) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள ஜாஸ்பர் நகருக்கு 2023ஆம் ஆண்டு குடிபெயர்ந்துள்ளார்கள்.
இந்நிலையில், ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், உட்பட அங்கு வாழ்ந்த சுமார் 25,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
மேலும், அவர்கள் அந்நாட்டு நிரந்தர குடியிருப்பு அனுமதியினை பெற்று அங்கேயே வசிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, அவர்களின் கனேடிய நிரந்தர குடியுரிமை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, ரமன்தீப்பின் பணி உரிமம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியுடன் காலாவதி ஆகவுள்ளதுடன் அதை நீட்டிக்க அவர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பணி உரிமை புதுப்பித்தல் ஆவணங்கள், தீயில் எரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் ரமன்தீப்பை போல, அங்கு தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வந்த வெளிநாட்டவர்கள் சிலருக்கும் உருவாகியுள்ளது.
Comments are closed.