ருதுராஜ் மற்றும் நடராஜனுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு! தமிழக வீரர் வெளியிட்ட கருத்து

14

விரைவில் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) மற்றும் நடராஜன் (Natarajan) ஆகியோர் அணியில் இடம்பிடிப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி (Lakshmipathy Balaji) தெரிவித்துள்ளார்.

கெளதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர், இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நடராஜன் ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பிடித்திருக்கவில்லை.

இறுதியாக நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த போதும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் போது, அவர்கள் விரைவில் அணியில் இடம்பிடிப்பார்கள் என பாலாஜி தெரிவித்திருந்தார்.

முன்னதாக, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாலாஜி நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இது தொடர்பில் தானும் இந்திய அணி நிர்வாகமும் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு20 போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.