சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு..

0 3

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சபைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், அவரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சலிட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறீதரன் எம்.பி உரையாற்ற முயற்சிக்கின்ற போதிலும் அதற்கு இடம்கொடாமல் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் கூச்சலிட்டுள்ளனர்.

இதேவேளை, இடையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “தான் ஒரு 20 செக்கன்கள் இடையில் உரையாற்றியபோது தன்னை நாடாளுமன்றத்திற்கு வெளியில் அனுப்பியதாகவும், ஆனால், தற்போது இவ்வளவு பேர் கூச்சலிட்டுக் கொண்டிக்கும் போது அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும்” ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.