யாழில் பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூரம்!

0 2

யாழ்ப்பாணத்தில் தனது 6 வயது பெண் பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தையொருவர் தலைமறைவாகியுள்ளார்.

அந்த பிள்ளை தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதன்போது குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தைக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததும், உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார்.

அவரை கைது செய்ய இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.