நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்திருந்தாலும், அது தாமதமாகி வருவதாகவும், அதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் உப்பு கையிருப்புக்கள் வந்து சேரும் பட்சத்தில், தற்போதைய உப்பு பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தையில் உப்பு விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு கிலோகிராம் உப்பு 450 முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்ய வர்த்தகர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக தங்கள் சமூக ஊடக கணக்குகளிலும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் வினவிய போது, உப்பு விலை தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.