லாகூரை விட்டு வெளியேறுங்கள்! அமெரிகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0 1

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லாகூரில் உள்ள அமெரிக்கர்களை குறித்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், லாகூரை விட்டு வெளியேற முடியவில்லை என்றால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா கடந்த 7ஆம் திகதி நள்ளிரவில் சுமார் 25 நிமிடத்திற்குள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்தது.

இதனால், பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

குறிப்பாக அவந்திபூரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட்டு, அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அதாம்பூர், பதிண்டா, சண்டிகார், நநல், பலோடி, உட்டார்லை, பூஜ் ஆகிய இடங்கில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் சரமாரி தாக்குதல் நடத்தியது.

இந்திய விமானப்படை எஸ்-400 சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு மூலம் அவைகள் தாக்கி அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.