தெற்காசியாவில் முதன்முறையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு கிடைத்த அங்கீகாரம்

0 1

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சரக்குப் பிரிவான ஸ்ரீலங்கன் கார்கோ, லித்தியம் மற்றும் சோடியம் அயன் பேட்டரிகளை கொண்டு செல்வதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற தெற்காசியாவின் முதல் விமான நிறுவனமாக மாறியுள்ளது.

இந்த அனுமதியைப் பெறுவதற்காக, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தால் கடுமையான மதிப்பீடு மற்றும் தணிக்கை செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஸ்ரீலங்கன் கார்கோவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த மின்கலங்களின் பயன்பாடு தற்போது உலகளவில் வேகமாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அங்கீகாரத்தை பெறுவது இலங்கையின் அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் ஒரு பெரிய சாதனையாக மாறியுள்ளது.

ஸ்ரீலங்கன் கார்கோ வாரத்திற்கு உலகம் முழுவதும் 21 நாடுகளில் 30 நகரங்களுக்கு நேரடியாக சேவையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.