பூமியை அதிர வைக்கும் அறிவிப்பு! ட்ரம்பின் அறிவிப்பால் அச்சத்தில் உலக நாடுகள்

0 1

பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்திருந்தனர்.

அப்போது, ட்ரம்ப் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த ஒரு சில நாள்களில் “உலகை அதிர வைக்கும்” ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாகக் கூறியுள்ளார்.

அது வணிகம் தொடர்பான அறிவிப்பு அல்ல என்று மட்டும் தெளிவுபடுத்திய டிரம்ப், அதைத் தவிர்த்து வேறு ஒரு விஷயம் இது.

ஆனால் நிச்சயம் அது உலகை அதிர வைக்கும் அறிவிப்பாக இருக்கும், நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக அறிமுகப்படவிருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

ட்ரம்பின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி என்ன சொல்வதற்கு திட்டமிடுகிறார் என்று பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தில் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களே, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.