நீதிமன்றில் சரணடைந்த பிரசன்ன ரணவீர

0 3

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது.

போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.