பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இந்தியா(India) சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவித்தலை வௌியிட்டுள்ளது.
இதற்கு “ஒப்பரேஷன் சிந்தூர்” என்று இந்த நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு குறித்த இடங்களில் இருந்தே தீவிரவாதிகள் தயார்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியே இந்தியா இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாக்கிஸ்தான் இதுவரை எந்தவொரு பிரதிபலிப்பையும் வெளியிடவில்லை.