அரசாங்கத்தை எதிர்க்கும் மற்றும் ஜே.வி.பி-க்கு பிரச்சனையாக இருப்பவர்கள் அனைவரையும் கொலைசெய்யும் முயற்சி எதிர்காலத்தில் நடக்கலாம் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இந்த அரசாங்கத்தை எதிர்க்கும் தரப்பினரை கொல்ல முயற்சிப்பதை நாங்கள் காண்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த கொலை முயற்சியை மேற்கொள்ள பாதாள உலகத்திற்கு உதவி கிடைப்பதாகத் தெரிகிறது என்றும் சாகர குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே ஒரு நாடாக இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது மற்றும் மிகவும் தீவிரமான சூழ்நிலை எனவும் அவர் கூறியுள்ளார்.