கடவுச்சீட்டு சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0 0

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குதல் மற்றும் ஒரு நாள், பொது சேவைகள் வழங்குதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

குறித்த சேவைகள் மே 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மட்டுப்படுத்தப்படும்.

ஒரு நாள் சேவைக்காக இயக்கப்பட்ட 24 மணி நேர சேவை குறித்த நாட்களில் இயங்காது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாகவே இந்த சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.