பாதாள உலகத் தலைவர் கஞ்சிபாணி இம்ரான், பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனை படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்களை மேற்கோள்காட்டி காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தேசபந்து தென்னகோனுக்குத் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட முந்தைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
மேலும் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு, முந்தைய பாதுகாப்பு இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.