யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் ஒரு முக்கிய நபரை நேற்றையதினம்(30) வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.