சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், அவருடன் சிறையில் இருந்த கலீல் என்ற புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபரை சிஐடியினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த குறித்த நபர், பிள்ளையானை என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
பிள்ளையானின் பெயரில் சில கடிதங்களை அவர் எழுதியுள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையானுடன் இருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எட்வின் சில்வா கிருஷ்ணன் ராஜா, ரங்கசாமி கனகநாயகம் மற்றும் வினோத் ஆகிய மூன்று பேரிடமும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.