கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் செயற்றிட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0 5

கால்நடை வளர்ப்பில் ஈடுபட அதிக விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு செயல்முறைia செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் காப்பீட்டுத் துறையில் மிகக் குறைந்த தொகையை வசூலிப்பதன் மூலம் கால்நடைகள் மற்றும் ஆடுகளுக்கு இந்தக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

இதன்படி, மேற்கண்ட விலங்குகள் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்தாலோ காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட வேண்டும்.

2025ஆம் ஆண்டு கால்நடை காப்பீட்டிற்கு பசுவின் சந்தை மதிப்பில் 3வீதம் – 4வீதம் வரை காப்பீட்டு தொகையும் ஆடுகளுக்கு அதிகபட்ச காப்பீட்டு தொகையாக 7வீதமும் வசூலிக்கப்படுகின்றது.

இதன்கீழ், விவசாயி ஒருவர் வளர்க்கும் அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை நாடுமுழுவதும் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.