இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வருவாயில் பாரிய அதிகரிப்பு

0 5

2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி 1.27 கோடி இந்திய ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 2014-2015 ஆம் ஆண்டை விட 174% அதிகரிப்பைக் குறிப்பதாக கூறப்படுகிறது.

இது “மேக் இன் இந்தியா“( ABOUT US Make In India) முயற்சியின் வெற்றியைக் குறிக்கிறது என்று ஊடக அறிக்கை மேலும் கூறியுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி,

2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதிகள் 21,083 கோடி என்ற சாதனை மதிப்பை எட்டியுள்ளன.

இது ஒரு தசாப்தத்தில் 30 மடங்கு விரிவடைந்துள்ளது. மேலும் இந்த உபகரணங்கள் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று ஊடக அறிக்கை மேலும் கூறுகிறது.

உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாறும் நோக்கத்துடன், இந்தியா தற்போது 2029 ஆம் ஆண்டுக்குள் 3 கோடி ரூபா பாதுகாப்பு உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.

மற்றும் 2029 ஆம் ஆண்டுக்குள் அதன் ஏற்றுமதியை 50,000 கோடி ரூபாவாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.