இந்தோனேசியாவின் (Indonesia) கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்துள்ளமையால் அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வெடித்த தீக்குழம்புகள் சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு வெளியேறியுள்ளன.
இதனால் அவுஸ்திரேலியா – இந்தோனேசியா இடையே செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
,ந்நிலையில், கடந்தாண்டு நவம்பரிலும் இந்த எரிமலை வெடித்ததால், 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.