ஜேர்மன் நகரமொன்றில், மீண்டும் ஒரு இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Dresden நகரில், பாலம் ஒன்றின் கட்டுமானப்பணி நடந்துவரும் நிலையில், நேற்று காலை வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது, இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானியா வீசிய குண்டுகளில் ஒன்று ஆகும்.
அந்த நகரில் வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதிபேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால், சுமார் 10,000 பேரின் வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் நகரங்கள் பலவற்றில், இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டுகள் கட்டுமானப்பணியின்போது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன.
Dresden நகரில் 1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 4,000குண்டுகள் வீசப்பட்டன. அந்த தாக்குதலில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது வீசப்பட்ட குண்டுகளில், வெடிக்காத பல குண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.