வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.., எல் அண்ட் டி தலைவரின் பேச்சுக்கு தீபிகா படுகோன் ஆவேசம்

0 1

வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற எல் அண்ட் டி தலைவரின் பேச்சுக்கு தீபிகா படுகோன் பதிலடி கொடுத்துள்ளார்.

பணி நேரம் தொடர்பாக எல் அண்ட் டி நிறுவனத்தின் சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பணியாளர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைக்க முடியவில்லை என்று நான் வருத்தப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் உங்களை வேலை செய்ய வைத்தால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறேன்.

வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? மனைவி எவ்வளவு நேரம் கணவரை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்.

சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே சமயம் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். நீங்கள் உலகின் டாப்பில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்றார்

இவரின் கருத்துக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், ” #MentalHealthMatters என்று கூறி இவ்வளவு மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.      

Leave A Reply

Your email address will not be published.