டிரான்ஸ்ஃபார்மரையே திருடி சென்ற திருடர்கள்.., மொத்த கிராமமே இருளில் மூழ்கி தவிப்பு

0 1

இந்திய கிராமம் ஒன்றில் டிரான்ஸ்ஃபார்மரை திருடர்கள் திருடி சென்றதால் மொத்த கிராமமே இருளில் மூழ்கியதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், படவுன் மாவட்டத்தில் உள்ள சோராஹா கிராமத்தில் மின் விநியோகம் செய்து வந்த டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் திகதி அன்று கிராமத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்துவந்த 240 கிலோவாட் டிரான்ஸ்ஃபார்மர் திருடப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதாவது, டிரான்ஸ்ஃபார்மர் வெட்டி எடுக்கப்பட்டு அதில் உள்ள மறுவிற்பனைக்கு உகந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டது. செப்பு கம்பிகள், உலோகக் கூறுகள் உள்ளிட்ட விற்கத் தகுந்த அனைத்து அத்தியாவசியப் பாகங்களும் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மின்துறை சார்ந்தவர்கள் உதவியின்றி இந்த திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

திருட்டு நடைபெற்ற இடத்தில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் நடவடிக்கைகள் ஆகியவற்றை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் திருடர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Leave A Reply

Your email address will not be published.