பிரித்தானியாவுக்கு ஏவுகணைகளால் ஆபத்து: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

17

பிரித்தானியா, ஏவுகணைகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்து பிரித்தானியாவை நோக்கி ஏவுகணைகள் வீசப்படுமானால், அவை எந்த திசையிலிருந்து வந்தாலும், தாக்கப்படும் அபாயத்தில் பிரித்தானியா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல, பிரித்தானியாவின் வான் பாதுகாப்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும், அதனால் பிரித்தானியா ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பாதுகாப்புக்காக பிரித்தானியா கூடுதல் நிதி செலவிடவேண்டும் என நேட்டோ அமைப்பு கோர உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இதற்கிடையில், பிரித்தானியாவின் வான் பாதுகாப்பில் ஓட்டைகள் உள்ளதாக செய்திகள் வெளியானதைக் கேள்விப்பட்டு ரஷ்ய ஜனாதிபதி சிரிப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.

Comments are closed.