சீனாவில் (China) பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், உரிய ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்ற புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறது.
இந்த வைரஸ் நிலைமையினால் பாதிக்கப்பட்ட நபர்களால் சீனாவிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் HMPV காரணமாக கடுமையான பாதிப்புக்குள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் சீன மருத்துவர்களும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.