சிரியாவில் (Syria) நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்ஃ (Abu Yusif) கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு யூசிப்பை (Abu Yusif) குறிவைத்து அமெரிக்கப் படையணிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது, சிரியாவில் 8,000 ற்கும் அதிகமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.