நாடாளுமன்ற பணியாளர்களின் உணவுக் கட்டணம் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பணியாளர்களுக்கு மாதாந்த உணவுக் கட்டணமாக இதுவரை காலமும் 1000 ரூபா மட்டுமே அறவிடப்பட்டு வந்தது.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய குறித்த கட்டணம் தற்போதைக்கு மூவாயிரத்து 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கான உணவுக் கட்டணமும் ஆயிரத்து 500 ரூபாவில் இருந்து 4 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பணியாளர்களுக்கான பல்வேறு சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் உணவுக் கட்டணத்தையும் அதிகரித்திருப்பது குறித்து பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.