உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

5

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவூச்சீட்டாக வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் (Mexico) கடவூச்சீட்டு உள்ளது.

இதன் விலை சுமார் ரூ.19,481.75 ரூபாய் என்பதுடன் இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். கடவூச்சீட்டு என்பது உலகத்தை சுற்றி வர உதவும் மிக முக்கியமான பயண ஆவணமாகும்.

இதனை பெறுவதற்கு மக்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கடவூச்சீட்டின் விலை வசிக்கும் இடத்தைப் பொறுத்தது மற்றும் நாடுகளுக்கு இடையே மாறுபடும்.

Compare The Market அறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 -ம் ஆண்டில் கடவூச்சீட்டு பெறுவதற்கான செலவு ரூ.19,000 முதல் ரூ.1,500 வரை மாறுபடுகிறது.

இதற்கமைய, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவூச்சீட்டை வட அமெரிக்க நாடான மெக்சிகோ கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் 10 ஆண்டு கடவூச்சீட்டு ரூ.19,041 மற்றும் அமெரிக்காவின் 10 ஆண்டு கடவூச்சீட்டு ரூ.13,868 ஆகும்.

Comments are closed.