சர்வதேசத்திற்கு தமிழர்கள் வழங்கிய தகவல்! ஐ.நாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

20

தென்னிலங்கை அரசியல் கட்சிக்கு வடக்கு மாகாண மக்கள் வாக்களித்ததன் மூலம் சர்வதேசத்திற்கு வலுவான செய்தியொன்றை தமிழர்கள் வழங்கியுள்ளதாக பேராசிரியர் சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமிழர்களின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில், நாட்டின் 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றது.

கடந்த தேர்தல்களில் வடகிழக்கு மக்கள் தெற்கில் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருக்கவில்லை. இதன் விளைவாகவே சர்வதேச சமூகம் இலங்கையை சமத்துவ பிரச்சனைகள் உள்ளமையை ஏற்றுக்கொண்டனர்.

கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெறவில்லை. எனினும் பொதுத் தேர்தலில் வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி தமது வாக்குகளை வழங்கியமை, நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு சிறந்த உதாரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.