இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்(S. Jaishankar) அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு(Vijitha Herath) எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் தமது வாழ்த்து செய்தியை கூறியுள்ளார்.
இதன்படி நட்புறவின் வரலாற்று உறவுகளை வலுப்படுத்த தயாராக இருப்பதாக வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை இதில் எடுத்துக் கூறியுள்ளார்.
Comments are closed.