ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem), இஸ்ரேலை (Israel) தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளதாக லெபனானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் “நம்பர் 2” என்று அழைக்கப்படும் நைம் காசிமை” (Naim Qassem) கடந்த மாதம் 25 ஆம் திகதி தலைவராக ஹிஸ்புல்லா அறிவித்தது.
இந்த நிலையில், துணைத் தலைவராக இருந்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட காசிம், ஈரான் ஆதரவு பெற்ற லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக ஹசன் நஸ்ரல்லாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில், “இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக தாங்கள் நிச்சயம் வெற்றி அடைவோம்” என இஸ்ரேலுக்கு எதிராக நைம் காசிம் குரல் கொடுத்துள்ளார்.
அத்தோடு, ஹிஸ்புல்லாக்களுக்காக அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் போராடி இறந்தவர்களை அவர் பாராட்டவும் செய்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாத தொடக்கத்தில் லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்குமாறு இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, இல்லாவிட்டால் இஸ்ரேலுக்கு வலியை எதிர்நோக்க நேரிடும் என காசிம் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.