எல்லைத்தாண்டிய 11 இந்திய மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்தமையால், புதுக்கோட்டையை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போது அதில் 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுக்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 வருடனம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 11 மீனவர்கள் இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதால் சிறை தண்டனை விதிப்பதாகவும் புதிதாக கைதான 4 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.