இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.
Access to Nutrition Initiative என்ற அமைப்பு 30 நாடுகளில், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் Nestle, PepsiCo, Unilever ஆகிய உணவு நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தரம் குறைந்த உணவுப் பொருட்களையே விற்பதாக தெரிய வந்துள்ளது.
ஐந்து மதிப்பெண்ணுக்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள்தான் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆனால் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்த உணவுப் பொருட்கள், அதிலும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8 மதிப்பெண்ணாகவே இருப்பதாக அதிர்ச்சி அளிக்கிறது இந்த ஆய்வு.
இதுகுறித்து ATNI ஆய்வுக்குழு தலைவர் மார்க் விஜ்னே (Mark Wijne) கூறுகையில், “அரசுகள் உணவுத் தரம் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதுபோன்ற நிறுவனங்கள் ஏழ்மை நாடுகளில் என்ன மாதிரியான பொருட்களை விற்பனை செய்கிறதென்றே தெரியவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு அந்நாடுகளில் விற்பனையை அதிகப்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் அங்கு விற்கும் உணவுப் பொருட்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Comments are closed.