வடகொரியா (North Korea) நாடானது மிகவும் மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு நாடும் மர்மம் நிறைந்த நாடாக இருக்கின்றது.
வடகொரியாவின் சர்வதிகார ஆட்சி முறையினாலேயே மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேற்பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தான் (Turkmenistan) எனும் நாடும் எளிதில் செல்ல முடியாத அல்லது மர்மம் நிறைந்த நாடாக இருந்து வருகிறது.
1925 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தில் ஒரு பகுதியாக இருந்த துருக்மெனிஸ்தான், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைவு பெற்றபோது தனி நாடாக மாறியது.
அன்று முதல் அங்கு சர்வாதிகார ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
துருக்மெனிஸ்தான் நாடு, பெரும்பான்மையாக மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளதோடு இங்கு தங்க கட்டடங்களும் இருக்கின்றன. இதில், இந்த நாட்டின் தலைநகரமான அஷ்கபாத், 4.5 மில்லியன் சதுர மீட்டர் தூரத்தில் 543 வெள்ளை மார்பிள் கட்டடங்கள் கொண்டு 2013-ம் ஆண்டு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த நாட்டிற்கு செல்ல தற்போதும் கூட கொரோனா பரிசோதனை கட்டாயமாக இருப்பதோடு விசா பெறுவதும் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.
Comments are closed.