தோல்விக்கு பின் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டும் ஜனநாயகக் கட்சியினர்: அமைதி காக்கும் ட்ரம்ப் தரப்பு

9

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றமைக்கு காரணமாக ஜனநாயகக் கட்சியினர் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது அமைச்சரவையில் நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்கள் தொடர்பில் குடியரசு கட்சியினர் தொடர்ந்தும் அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகத் தலைவர்கள் பலரும் ட்ரம்ப் வெற்றி பெற்றமைக்கு தமது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஜோ பைடன் தனது ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றியுள்ளார்.

இதன்போது, தனது ஆதரவாளர்களை நம்பிக்கை இழக்க வேண்டாம் என கூறிய அவர் வெற்றி பெற்ற ட்ரம்ப்பிற்கும் கடுமையாக முயற்சித்த கமலா ஹரிஸிற்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதித்து வரும் நிலையில், அடுத்த நிர்வாக செயற்பாடுகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.