இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ: முன்வைக்கப்பட்ட விமர்சனம்

14

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் இந்து மக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார்.

கனடா ஒன்ராறியோவின் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது.

குறித்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்ட ரவ்நீத் சிங் பிட்டு, கனேடிய பிரதமர் அந்நாட்டில் வாழும் இந்துக்களை பிளவுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கிடையிலும் ட்ரூடோ பிரிவினையை ஏற்படுத்தியுள்ளதாக ரவ்நீத் சிங் பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், கனேடிய நாட்டின் பொலிஸார் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கே சார்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்கோவில்கள் தகர்க்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ள அவர், இந்த சம்பவத்திற்கு பிறகு கனடா நாட்டிற்கும், அந்நாட்டு பிரதமருக்கும் இதுகுறித்து கருத்துக்கூற தகுதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.