பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

20

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மன்னருக்கு 45 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக ஊதிய உயர்வு கிடைக்கவிருக்கும் நிலையில், ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 53 சதவிகிதம் அதிகரித்து, 130 மில்லியன் பவுண்டுகளைத் தாண்டிவிட்டதாக அரண்மனை வட்டாரம் அறிவித்துள்ளது.

மேலும், மன்னராக நாட்டை ஆள்வதற்காக, மக்கள் வரிப்பணத்திலிருந்து மன்னருக்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.

அத்துடன், பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு சொந்தமான பகுதிகளிலிருந்து 1.1 பில்லியன் பவுண்டுகள் இலாபம் கிடைத்துள்ளது.

இதற்கினங்க, மன்னருக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் பணம் 86.3 மில்லியனாக உள்ளதோடு, குறித்த தொகை 2024,2025 காலகட்டத்தில் 132 மில்லியன் பவுண்டுகளாக உயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளவரசர் வில்லியமுக்கு Duchy of Cornwall estate என்னும் பகுதியிலிருந்து 23 மில்லியன் பவுண்டுகள் வருவாய் கிடைத்துள்ளது.

அதிலிருந்து உக்ரைன் போர், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கும், லண்டன் ஏர் நோயாளர்காவு சேவை, மன நலன் ஆதரவு நிறுவனங்கள் என பல சேவை அமைப்புகளுக்கும் அவர் நன்கொடை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.

Comments are closed.