ரத்து செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பிரசார கூட்டம்!

16

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக இன்று (18.07.2024) நடைபெறவிருந்த அரசியல் பிரசாரக் கூட்டத்தையும் அவர் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜோ பைடனுக்கு இரண்டு முறை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் குணமடைந்துள்ளார்.

தற்போது 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.