பனிப்போர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள புடின்

14

நீண்ட தூர ஏவுகணைகளை ஜேர்மனியில்(Germany) நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு பனிப்போருக்கு வழிவகை செய்யக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின்போது நீண்ட தூர ஏவுகணைகளை ஜேர்மனியில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸும்(Olaf Scholz) இந்த முடிவை வரவேற்றுள்ளார். ஆனால், அமெரிக்காவின் அறிவிப்பு ரஷ்ய ஜனாதிபதி புடினை கோபப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாம் பனிப்போரை நோக்கி உறுதியான அடி எடுத்து வைக்கிறோம் என்று கூறியுள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர், நேரடி மோதலுக்குரிய வகையிலான பனிப்போரின் அனைத்து விடயங்களும் மீண்டும் திரும்புகின்றன என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த முடிவு, ஜனாதிபதி ஷோல்ஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஜேர்மனியில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.