பஹல்காம் தாக்குதல் எதிரொலி! இந்தியாவிற்கு FBI ஆதரவு..

0 1

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) இயக்குநர் காஷ் படேல் உறுதியளித்துள்ளார்.

“பயங்கரவாதத்தின் தீமைகளால் நமது உலகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் நினைவூட்டல்” பஹல்காம் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 22 அன்று நடந்த இந்த கொடூரமான பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலை நடத்தியதாக இந்திய தரப்பு அறிவித்துள்ளது.

இது இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பரவலான இராஜதந்திர மற்றும் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

“காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் FBI எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.