2025ஆம் ஆண்டில் திறைசேரி பதிவு செய்யப்போகும் சாதனை: ஜனாதிபதி உறுதி

0 1

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருமானம் ஈட்டும் ஆண்டாக 2025ஆம் ஆண்டை திறைசேரி பதிவு செய்யும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி மாதத்தில் உள்நாட்டு இறைவரி திணைக்களம், எதிர்பார்த்த வருமான இலக்குகளை தாண்டியுள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சுங்கத் திணைக்களம், அதன் வருமான இலக்குகளை தாண்டியுள்ளது.

வரிப் பணம் தவறாகப் பயன்படுத்தப்படாது. அனைத்து வரிப் பணத்தையும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்.

வணிகங்கள் செழிக்க அரசாங்கம் உதவும் அதேவேளையில் நியாயமான வரிகள் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த சில மாதங்களாக நிலையான மாற்று விகிதத்தை பராமரித்து, வட்டி விகிதங்களை 10 சதவீதத்திற்கு கீழ் குறைத்து, அரசாங்கம் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.