எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira (Abeywardana) எதிர்வு கூறியுள்ளார்.
காலி, தலாப்பிட்டியவில் இன்று (27) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியுறும்.
தற்போதைக்கு நாடு பயணிக்கும் திசையைக் கொண்டும் எனது பொருளாதார அறிவைக் கொண்டும் அதனை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அதே நேரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாடு சிக்கலான நிலைமையொன்றுக்கு முகம் கொடுக்கும் போது அதில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒருபோதும் தயங்க மாட்டேன் என்றும் வஜிர அபேவர்தன தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.