பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 4

தற்போது வெளியாகியிருக்கும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2024ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியுள்ள நிலையில், அதிகளவான பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியினைப் பெற்றுள்ளனர். இது 64.74 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மொத்த பரீட்சார்த்திகளின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 63.25 சதவீதமாகக் காணப்பட்டது.

இது 2023ஆம் ஆண்டு 64.33 சதவீதமாக அதிகரித்த நிலையில், 2024ஆம் ஆண்டு 64.73 சதவீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இது ஒரு சிறந்த மாற்றம்.

எனினும், மூன்று பாடங்களில் அதி சிறந்த சித்திகளைப் பெற்ற பரீட்சார்த்திகளின் சதவீதம் மாறாமல் ஒரே நிலையில் இருப்பது கவனத்திற் கொள்ள வேண்டிய நிலையில் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.