இந்தியாவுடன் இலங்கை செய்து கொண்டுள்ள இரண்டு ஒப்பந்தங்கள் குறித்த விபரங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கப்படுத்தியுள்ளார்.
பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இது தொடர்பில் நேற்று (26) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த இரண்டு ஒப்பந்தங்களின் நகல்களை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டிருந்த அனைத்து ஒப்பந்தங்களும் ஆங்கில மொழியில் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஆங்கிலம் மட்டுமன்றி ஹிந்தி மற்றும் அரபி மொழியிலும் பிரதிகளைக் கொண்டுள்ளன.
உதய கம்மன்பில பகிரங்கப்படுத்திய ஒப்பந்தங்களில் ஒன்று திருகோணமலையை பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாக அபிவிருத்தி செய்தல் பற்றியதாகும்.
மற்றைய ஒப்பந்தம் இலங்கையின் தலைமன்னார் மற்றும் இந்தியாவின் மதுரைக்கு இடையில் கம்பிகள் மூலம் மின்பரிவர்த்தனை மேற்கொள்வது தொடர்பானதாகும்.