குடுசலிந்தவின் உதவியாளர் ஆயுதங்களுடன் கைது

0 0

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷானின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரகமை பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சந்தேகத்தின் ​பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வீட்டைச் சோதனையிடும் ​போது அங்கிருந்து ரிவோல்வர், பெருந்தொகையான T56 துப்பாக்கி ரவைகள், கூர்மையான வாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதஙகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணையின்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், தற்போதைக்குத் தலைமறைவாகி இருக்கும் பிரபல பாதாள உலகப் புள்ளி குடுசலிந்துவின் உதவியாளர் என்பது தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பண்டாரகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.