இந்தியாவுடன் முழுமையான போர்! எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

0 3

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுடன் “முழுமையான போர்” ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை ஒப்புக்கொள்கின்றேன் அமெரிக்காவிற்காக இந்த செயலை நாங்கள் செய்ய ஆரம்பித்தோம்.

நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவிற்காக இந்த வேலையைச் செய்து வருகிறோம்.

சோவியத் யூனியனுக்கு எதிரான போரிலும், பின்னர் நடந்த போரிலும் பாகிஸ்தானின் சாதனையை மறுக்க முடியாது” என கூறியுள்ளார்.

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) மூடுதல், பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா விலக்குத் திட்டத்தை (SVES) இடைநிறுத்துதல், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப 40 மணிநேரம் அவகாசம் அளித்தல் மற்றும் குறைத்தல் போன்ற பல இராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு அறிவித்தது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து 1960 இல் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள், அதற்கு சதி செய்தவர்களுடன் சேர்ந்து, அவர்கள் கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

பயங்கரவாதத்தின் மீதமுள்ள கோட்டைகளை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதக் குற்றவாளிகளின் முதுகெலும்பை உடைக்கும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.