இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு 2 ஆவது தடவையாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இஸ்ரேல் (Israel) மீது வரி விதிப்பு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில், கடந்த (2) ஆம் திகதி இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவித்துள்ளார்.
இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.