பிரித்தானியாவுக்கு அனுகூலம் இருந்தால் மாத்திரமே அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளின் இறக்குமதிகள் மீது வரி விதித்திருந்தார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்காவிற்கு சென்று ட்ரம்பை சந்திருந்த வேளை, இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டால் பிரித்தானியா மீது வரிகள் விதிக்கவேண்டிய அவசியமே இருக்காது என்று ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
எனினும், தற்போது பிரித்தானியாவின் இறக்குமதிகள் மீது 10 சதவீத வரியும் கார்கள் மீது 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பிரித்தானியா உள்ளது.
இருப்பினும், பிரித்தானியாவுக்கு அனுகூலம் இருந்தால் மாத்திரமே அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம் என ஸ்டார்மர் கூறியுள்ளார்.