தவறுக்கு மேல் தவறிழைக்கும் ட்ரம்ப்! எதிர்ப்புக்கு தயாராகும் சீனா

0 9

சீனத் தயாரிப்புப் பொருட்களுக்கு கூடுதலாக 50% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு “ஒரு தவறுக்கு மேல் ஒரு தவறு” என்று சீன வர்த்தக அமைச்சகம் கூறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு புதிய 34% வரியை விதித்தார்,

அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 34% வரியை விதித்தது.

அதைத் தொடர்ந்து, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை சீனா நீக்காவிட்டால்,அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு மேலும் 50% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி நேற்று (07) முடிவு செய்தார்.

டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு பதிலளித்த சீன வர்த்தக அமைச்சகம், டொனால்ட் டிரம்பின் தன்னிச்சையான வரி விதிப்புக்கு எதிராக இறுதிவரை போராட சீனா தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

சீனத் தயாரிப்புப் பொருட்களுக்கு கூடுதலாக 50% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதியின் முடிவு “ஒரு தவறுக்கு மேல் ஒரு தவறு” என்று சீன வர்த்தக அமைச்சகம் கூறுகிறது.

புதிய வரிகளுக்கான அனைத்து திட்டங்களையும் திரும்பப் பெறவும், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கா – சீனா வேறுபாடுகளைத் தீர்க்கவும் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.