இதய நோயால் இலங்கையில் 60 ஆயிரம் உயிரிழப்பு

0 4

இதய நோய் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேரின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று இதயநோய் மூத்த ஆலோசகர் கோட்டாபய ரணசிங்க கூறியுள்ளார்.

அதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இதய நோய்கள் 15வீதமாக அதிகரித்துள்ளதாகவும், இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் 200 நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு வருவதாகவும் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடைய காரணிகளாக, மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் என்பனவற்றை கூறமுடியும் என்று கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஆரம்பகால தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் இருதய நோய்கள் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இருதய நோய்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.